ஏதோ கிருபையில வாழ்க்க ஓடுது
Yedho kirubaiyila vaazhka odudhu
ஏதோ கிருபையில வாழ்க்க ஓடுது
உங்க இரக்கத்தையே உள்ளம் நாடுது
எசமான் உங்களத்தானே நம்பி வாழுறேன்
மாறாத கிருபையத்தான் நம்பி ஓடுறேன்
சுய நீதிய கழட்டி வெச்சேன்
உங்க நீதிய உடுத்திகிட்டேன்
நீதிமானா மாத்துனீங்களே என்ன
நீதிமானா மாத்துனீங்களே
செஞ்ச பாவத்த ஒத்துக்கிட்டேன்
சாஷ்டாங்கமா விழுந்துபுட்டேன்
மன்னிச்சு அணைக்குறீங்களே
என்ன மன்னிச்சு அணைக்குறீங்களே
பசிக்கும்போது உணவு தந்து
ஜெபிக்கும்போது இரங்கி வந்து
ஆசீர்வதிக்கிறீங்களே என்ன
ஆசீர்வதிக்கிறீங்களே
அதிசயமா நடத்துறீங்க
ஆலோசனைய கொடுக்குறீங்க
பிள்ளையா ஏத்துக்கிட்டீங்களே
என்ன பிள்ளையா ஏத்துக்கிட்டீங்களே
உள்ளதில் வசனம் விதைக்கிறீங்க
உள்ளங்கையில் என்ன வரையுறீங்க
தகப்பன் நீங்கதானய்யா என்
தகப்பன் நீங்கதானய்யா
தவறும்போது திருத்துறீங்க
தடுக்கும்போது புடிக்கிறீங்க
தாயும் நீங்கதானய்யா என்
தாயும் நீங்கதானய்யா