இயேசு மானிடனாய் பிறந்தார்
Yesu Manidanai
இயேசு மானிடனாய் பிறந்தார்
இந்த லோகத்தை மீட்டிடவே
இறைவன் ஒளியாய் இருளில் உதித்தார்
இந்த நற்செய்தி சாற்றிடுவோம்
மேய்ப்பர்கள் இராவினிலே தங்கள்
மந்தையைக் காத்திருக்க
தூதர்கள் வானத்திலே தோன்றி
தேவனைத் துதித்தனரே
ஆலோசனை கர்த்தரே இவர்
அற்புதமானவரே
விண் சமாதான பிரபு சர்வ
வல்லவர் பிறந்தனரே
யாக்கோபில் ஓர் நட்சத்திரம் இவர்
வாக்கு மாறாதவரே
கண்ணிமை நேரத்திலே நம்மை
விண்ணதில் சேர்த்திடுவார்
பொன், பொருள், தூபவர்க்கம் வெள்ளைப்
போளமும் காணிக்கையே
சாட்சியாய் கொண்டு சென்றே - வான
சாஸ்திரிகள் பணிந்தனரே
மாட்டுத் தொழுவத்திலே பரன்
முன்னணையில் பிறந்தார்
தாழ்மையைப் பின்பற்றுவோம் அவர்
ஏழ்மையின் பாதையிலே

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter