இயேசுவின் இரண்டாம் வருகை
Yeasuvin Irandaam Varuhai
இயேசுவின் இரண்டாம் வருகை
அதி வேகமாய் நெருங்கி வருதே
ஆயத்தமாகிடுவோம்
அன்பர் இயேசுவை சந்திக்கவே
மாரநாதா அல்லேலூயா
நித்திரையை விட்டு நாம் எழும்புவோம்
நம் நீதியின் சூரியன் வருகிறார்
இரட்சிப்பின் வஸ்திரம் காத்துக் கொள்வோம்
நம் இரட்சகர் வருகிறார்
பரிசுத்தமாய் நம்மை காத்துக் கொள்வோம்
நம் பரிசுத்தர் வருகிறார்
நீதியாய் நியாயந்தீர்த்திடவே
நியாயாதிபதியாக வருகிறார்
மரணத்தை வென்ற நம் ஆண்டவர்
மணவாளனாகவே வருகிறார்
கறைதிரையற்ற சபையினை
தம்மோடு சேர்க்கவே வருகிறார்