இயேசுவின் அன்பை தியானிக்கையில்
Yesuvin Anbai Thiyaanikkaiyil
இயேசுவின் அன்பை தியானிக்கையில்
கண்களில் கண்ணீர் புரண்டோடுதே
கள்ளமில்லா அந்தக் கல்வாரி அன்பு
கள்ளன் என் இதயத்தைக் கரைத்திட்டதே
கல்லான என் உள்ளம் கரைந்திட்டதே
பாவி என் மீது ஏன் இந்த அன்பு
ஒன்றுமே புரியவில்லை
எனக்காக ஜீவன் தந்த இயேசுவுக்காய்
எந்தனின் வாழ்வை அர்ப்பணிக்கிறேன்
மெய்யான அன்பை நான் தேடி அலைந்தேன்
எங்குமே காணவில்லை
பாவியாய் ஓடி நான் திரிந்திட்ட வேளை
என்னையும் தம்மிடம் சேர்த்துக் கொண்டார்
ஒன்றுக்கும் உதவா என்னையும் தேடி
இயேசு என் வாழ்வில் வந்தார்
என்னையும் அழைத்தார் தம் சேவைக்காய்
உண்மையாய் ஊழியம் செய்திடுவேன்

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter