இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு
Yesuvin Kudumbam Ondru
இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு
அன்பு நிறைந்திடும் இடம் உண்டு
உயர்வுமில்லை அங்கு தாழ்வுமில்லை
ஏழையில்லை பாணக்காரன் இல்லை
இராஜாதி இராஜா இயேசு
என்றென்றும் ஆண்டிடுவார்
பாவமில்லை அங்கு சாபமில்லை
வியாதியில்லை கடும் பசியுமில்லை
இராஜாதி இராஜா இயேசு
என்றென்றும் காத்திடுவார்
இன்பமுண்டு சமாதானமுண்டு
வெற்றி உண்டு துதிபாடல் உண்டு
இராஜாதி இராஜா இயேசு
என்றென்றும் ஈந்திடுவார்

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter