இயேசுவின் நாமம் ஓங்கிடவே
Yesuvin Naamam Onkidave
இயேசுவின் நாமம் ஓங்கிடவே
நேசமுடன் புகழ் பாடிடுவோம்
காசினியில் நிகர் வேறதற்கில்லை
தாசர்கள் நாம் துதி சாற்றிடுவோம்
வானமும் பூமியும் யாவையுமே
வார்த்தையினால் உண்டாக்கினவர்
என்னை மண்ணென்று நினைவாக்கினவர்
எனக்கென்றும் சொந்தமவர்
அற்புதமாம் அதிசயமாம்
ஆண்டவர் இயேசுவின் நாமமதே
பேய் நடுங்கும் கடும் நோய் அகலும்
நல் பேர் புகழ் ஓங்கிடும் நாமமதே
வாழ்ந்திடும் வானோர் பூதலத்தோர்
வாழ்த்தி வணங்கிடும் நாமமதே
மானிடரின் முழங்கால் முடங்கும்
மெய் மேன்மை உயர் திரு நாமமதே
சாவு பயங்கள் நீங்கிடவே
சத்துருமேல் ஜெயம் பெற்றிடவே
சோதனையில் பல வேதனையில்
என் சொந்த அடைக்கல நாமமதே
வந்துன்னைச் சேர்ப்பேனென்றுரைத்த
வல்ல கிறிஸ்தேசுவின் நாமமதே
நீடுழியாய் நித்ய ராஜ்யத்திலே -தம்
நாமமதை நான் போற்றிடுவேன்