Yokkobe Yokkobe யாக்கோபே யாக்கோபே
யாக்கோபே (2) என் யாக்கோபே
யாக்கோபென்னும் சிறுபூச்சியே
பயப்படாதே நான் துணை நிற்கிறேன்
இஸ்ரவேலின் சிறுகூட்டமே
பயப்படாதே நான் துணை நிற்கிறேன்
என் யாக்கொபே என் யாக்கோபே
பயப்படாதே நான் துணை நிற்கிறேன்
உனது கூடாரம் அழகாய் மாற்றிடுவேன்
நீ பரவிப் போகின்ற ஆறாய் மாறிடுவாய்
உன்னை வாசனைவீசும்
சந்தனமரமாய் நாட்டுவேன்
உனதுமுகம் இனி வெட்கம் ஆவதில்லை
உனதுமுகம் இனி செத்துப்போவதில்லை
நீ என்னால் என்றும் மறக்கப்படுவதில்லை
உனது வேரைப் பரவச் செய்திடுவேன்
நீ பூத்துக் காய்த்துப் பூமியை நிரப்பிடுவாய்
உன் தூளை எண்ணத்தக்கவன் யாருண்டு