இயேசுவாலே பிடிக்கப்பட்டவன்
Yesuvale Pidikkapddavan
இயேசுவாலே பிடிக்கப்பட்டவன் -அவர்
இரத்தத்தாலே கழுவப்பட்டவன் -நான்
எனக்கென்று எதுவுமில்ல
இப்பூமி சொந்தமில்லை
எல்லாமே இயேசு..... என் இயேசு
எல்லாமே இயேசு இயேசு இயேசு
பரலோகம் தாய்வீடு
அதைத் தேடி நீ ஓடு
ஒருவரும் அழிந்து போகாமலே
தாயகம் வர வேண்டும் தப்பாமலே
அந்தகார இருளினின்று
ஆச்சரிய ஒளிக்கழைத்தார்
அழைத்தவர் புண்ணியங்கள் அறிவித்திட
இந்த அடிமையை தெரிந்தெடுத்தார்
இலாபமான அனைத்தையுமே
நஷ்டமென்று கருதுகின்றேன்
இயேசுவை அறிகின்ற தாகத்தினால்
எல்லாமே இழந்து விட்டேன் -நான்
பாடுகள் அனுபவிப்பேன்
பரலோக தேவனுக்காய்
கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும் நாளில்
களி கூர்ந்து மகிழ்ந்திருப்பேன் -நான்
பின்னானவை மறந்தேன்
முன்னானவை நாடினேன்
என் நேசர் தருகின்ற பரிசுக்காக
இலக்கை நோக்கித் தொடருகின்றேன்
நீதியை விரும்புகிறேன்
அக்கிரமம் வெறுக்கிறேன்
ஆனந்த தைல அபிஷேகத்தால்
அனுதினம் நிரம்புகிறேன்