இயேசப்பா உம்மைத் தேடி
Yesappa Ummai Thedi
இயேசப்பா உம்மைத் தேடி வந்தேனே
இங்கு எல்லமே விட்டு விட்டு வந்தேனே
எனக்கெல்லாமே நீர் தானே
என் வாழ்வெல்லாம் நீர் தானே
என் சொந்தம் பந்தம் யாவும் நீரே
சொந்தம் என்று சொன்னவுடனே
உம்மைத் தானே நினைக்கின்றேன்
உம்மை அறிந்த நாளிலிருந்து
உம்மையே அண்டி கிடக்கின்றேன்
அன்பு என்றாலே உமதன்பு ஒன்றுதானே
என்று மாறா அன்பு ஐயா
உயிரே உயிரே இங்கு
நீரின்றி நானில்லையே
உம்மையன்றி யாரை நம்பி
நானும் தேடி போவது
என் மனதின் வேதனையெல்லாம்
புரிந்து கொள்வார் யாருமில்லை
இதயம் நொறுங்கி கலங்கும் நேரம்
அன்பு காட்டவும் யாருமில்லை
அன்பே நீர் மட்டும் என்
வாழ்வில் இல்லையென்றால்
என்றோ மண்ணாகிப் போயிருப்பேன்
இயேசுவே இயேசுவே என்மேல்
கரிசனை உள்ளவரே
என்னை அறிந்த என் மனம் புரிந்த
ஒரு ஜீவன் நீரே ஐயா

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter