இயேசுவே உம்மை உயர்த்திடுவேன்
Yesuve Ummai Uyathiduven
இயேசுவே உம்மை உயர்த்திடுவேன்
என் நேசரே உம்மைப் பாடுவேன்
நீர் செய்த எல்லா நன்மைகட்காக
உமக்கே ஆராதனை
உமக்கே ஆராதனை-ஐயா
நீர் தான் என் தஞ்சமே
நீர் தான் என் கோட்டையே
துன்ப வேளையில் தூக்கி என்னை
தோளில் சுமந்தவரே
நீரே என் ஆதாரமே
நீரே என் துனையாளரே
சோர்ந்திடும் நேரம் சார்ந்திட உந்தன்
கிருபை ஈந்தவரே
நீர் தான் என் பெலன்
நீர் தான் என் சுகமே
கண்ணீர் துடைத்து கவலை போக்கி
ஆறுதல் அளிப்பவரே

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter