Yarundu Natha Ennai யாருண்டு நாதா என்னை
யாருண்டு நாதா என்னை விசாரிக்க
உறவுகள் இல்லையே
நீரின்றி யாருண்டு நாதா
நீரே என் தஞ்சமல்லோ
தனிமையில் கதறிய
ஆகாரின் குரலைக் கேட்டீர்
மனம் கசந்து கலங்கி நின்ற
அன்னாளின் ஜெபத்தை கேட்டீர்
நீரே நல்ல மேய்ப்பன்
வேண்டுதல் கேட்பவரே
கண்ணீரின் பாதையிலே
நடந்திடும் வேளையிலே
கரம் பிடித்தீர் எனை அணைத்தீர்
தேற்றுதே உம் கரமே
நீரே நல்ல சமாரியனே
என்னைத் தேற்றிடுவீர்
அடைக்கலம் தேடி வந்தேன்
உம் சிறகால் என்னை மூடும்
கொள்ளை நோய்க்கும் பொல்லாப்புக்கும்
விலக்கி காருமையா
பாரத்தை உம் மேல் வைத்து
விட்டேன் நீரே ஆதரித்தீர்