• waytochurch.com logo
Song # 15984

யூதாவின் ராஜசிங்கம் நீரே

Yudhavin Rajasingham Neerae


யூதாவின் ராஜசிங்கம் நீரே
அல்பாவும் ஒமேகாவும் நீரே
வல்லமை பெலன் ஞானம்
மகிமையும் துதியையும்
பெற்றுக் கொள்ள பாத்திரர் நீரே

பாவமானீரே எம்மை நீதியாக்கிட
சாபமானீரே எங்கள் சாபம் போக்கிட
காயமானீரே எங்கள் நோய்கள் தீர்த்திட
ஏழையானீரே எங்கள் ஏழ்மை நீக்கிட

நீர் என்றும் எந்தன் நல்ல மேய்ப்பர்
எந்நாளும் தாழ்ச்சியடையேனே
அமர்ந்த தண்ணீர் பசும்புல்
வெளியில் என்னை மேய்த்து
நித்தம் காக்கும் நல்ல தேவனே

பகைவர் முன்பாக பந்தி
ஆயத்தம் செய்தீர் என் தலையை
எண்ணையால் அபிஷேகமும் செய்தீர்
ஜீவ நாளெல்லாம் நன்மை
கிருபை தொடருமே நான்
கர்த்தர் வீட்டிலே நீடித்து வாழ்வேன்

என் நாவு உந்தன் நீதியையும்
நாளெல்லாம் உந்தன் துதியையும்
ஓயாமல் போற்றிப்பாடும்
குறைவையெல்லாம் நீக்கிப்போடும்
கைவிடாத நல்ல தேவன் நீர்

உமது மகிமையும் ஐசுவரியத்தின் படி
குறைகளெல்லாம் நிறைவாக்கும்
தேவனே யேகோவாயீரே நீர்
எந்தன் ஏல்ஷடாய் போதுமானவரிலும்
மிகவும் அதிகமானவர்


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com