இயேசுவின் அன்பை மறந்திடுவாயோ
Yesuvin Anbai Maranthiduvayo
இயேசுவின் அன்பை மறந்திடுவாயோ
மறந்திடுவாயோ மனிதப் பண்பிருந்தால்
மறந்திடாதிருக்க சிலுவையிலே அவர்
மரித்துத் தொங்கும் காட்சி
மனதில் நில்லாதோ
அளவில்லா அன்பு அதிசய அன்பு
ஆழம் அகலம் நீளம் எல்லைகாணா அன்பு
களங்கமில்லா அன்பு கருணைசேர் அன்பு
கல்வாரி மலையெங்கும் கதறிடும் அன்பு
ஈடில்லா அன்பு இணையில்லா அன்பு
இயேசுவின் உயிர் தந்த இலட்சிய அன்பு
ஆனந்த அன்பு அபூர்வ அன்பு
ஆண்டவர் இயேசு நம்மீது கொண்ட அன்பு
எனக்காக மனுவுரு தரித்த நல்லன்பு
எனக்காக தன்னையே உணவாக்கும் அன்பு
எனக்காக பாடுகள் ஏற்ற பேரன்பு
எனக்காக உயிரையே தந்த தேவன்பு