இயேசு கிறிஸ்து என் ஜீவன்
Yesu Kristhu Yen Jeevan
இயேசு கிறிஸ்து என் ஜீவன்
சாவது ஆதாயமே
வாழ்வது நானல்லா - இயேசு
என்னில் வாழ்கின்றார்
இயேசுவை நான் ஏற்றுக் கொண்டேன்
அவருக்குள் நான் வேர் கொண்டேன்
அவர் மேல் எழும்பும் கட்டடம் நான்
அசைவதில்லை தளர்வதும் இல்லை
என்ன வந்தாலும் கலங்கிடாமல்
இடுக்கண் நேரம் ஸ்தோத்தரிப்பேன்
அறிவைக் கடந்த தெய்வீக அமைதி
அடிமை வாழ்வின் கேடயமே
எனது ஜீவன் கிறிஸ்துவுடனே
தேவனுக்குள்ளே மறைந்தது
ஜீவன் கிறிஸ்து வெளிப்படும் நாளில்
மகிமையில் நான் வெளிப்படுவேனே
கிறிஸ்துவுக்குள்ளே இரத்தத்தினாலே
பாவ மன்னிப்பின் மீட்படைந்தேன்
அவரை அறியும் அறிவிலே வளர்வேன்
அவரின் விருப்பம் செய்தே மகிழ்வேன்

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter