• waytochurch.com logo
Song # 16000

Yakkoppe Nee யாக்கோபே நீ வேரூன்றுவாய்


யாக்கோபே நீ வேரூன்றுவாய்
பூத்துக் குலுங்கிடுவாய்
காய்த்துக் கனி தருவாய்
பூமியெல்லாம் நிரப்பிடுவாய் இந்த

என் மகனே நீ வேரூன்றுவாய்

நானே காப்பாற்றுவேன்
நாள்தோறும் நீர் பாய்ச்சுவேன்
இரவும் பகலும் காத்துக் கொள்வேன் உன்னை
எவரும் தீங்கிழைக்க விடமாட்டேன்

அருமையான மகன் அல்லவோ எனக்கு
பிரியமான பிள்ளையல்லவோ நீ
உன்னை நான் இன்னும் நினைக்கின்றேன்
உனக்காக என் இதயம் ஏங்குகின்றது

நுகங்களை முறித்துவிட்டேன்
கட்டுகளை அறுத்துவிட்டேன்
இனிமேல் நீ அடிமை ஆவதில்லை
எனக்கே ஊழியம் செய்திடுவாய்

புதிய கூர்மையான
போரடிக்கும் கருவியாக்குவேன் உன்னை
மலைகளை மிதித்து நொறுக்கிடுவாய்
குன்றுகளைத் தவிடு பொடியாக்குவாய்


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com