இயேசு ராஜா உம் இதயத் துடிப்பை
Yesu Raja Um Idaya
இயேசு ராஜா உம் இதயத் துடிப்பை
அறிந்து கொள்ளும் பாக்கியம் தாரும்
உம் ஏக்கம் எல்லாம் நிறைவேற்ற
கிருபையைத் தாரும்
ஒருவாழ்வு அது உமக்காக
உணர்வெல்லாம் உமக்காக
உள்ளமெல்லாம் உமக்காக
உம் இதயம் மகிழ்ந்திட வாழ்ந்திட வேண்டும்
உம் சித்தம் செய்து நான் மடிந்திட வேண்டும்
அழிந்து போகும் ஆத்துமாக்கள் நினைத்திட வேண்டும்
ஆத்தும பாரத்தினால் அலைந்திட வேண்டும்
உலகத்திற்கு மரித்து நான் வாழ்ந்திட வேண்டும்
உண்மையான ஊழியனாய் உழைத்திட வேண்டும்
அகிலத்தையே உம் அண்டை சேர்த்திட வேண்டும்
அனைத்து மகிமை உமக்கே நான் செலுத்திட வேண்டும்