இயேசுவின் பிள்ளைகள் நாங்கள்
Yesuvin Pillaigal Naangal
இயேசுவின் பிள்ளைகள் நாங்கள்
எப்போதும் மகிழ்ந்திருப்போம்
இயேசுவின் பிள்ளைகளே
எப்போதும் மகிழ்ந்திருங்கள்
எந்நேரமும் எவ்வேளையும்
இயேசுவில் களிகூருவோம்
நம் நேசரில் களிகூருவோம்
எதை நினைத்தும் கலங்காமல்
இப்போது ஸ்தோத்தரிப்போம்
நாம் எப்போதும் ஸ்தோத்தரிப்போம்
இன்று காணும் எகிப்தியரை
இனிமேல் காணமாட்டோம்
நமக்காய் யுத்தம் செய்வார் இயேசு
நமக்கு எதிராய் மந்திரம் இல்லை
குறிசொல்லல் எதுவும் இல்லை
சாத்தான் நம் காலின் கீழே இன்று
காற்றை நாம் காணமாட்டோம்
மழையையும் பார்க்கமாட்டோம்
வாய்க்கால்கள் நிரப்பபடும்
நினைப்பதற்கும் வேண்டுவதற்கும்
அதிகமாய் செய்திடுவார்
அதிசயம் செய்திடுவார்

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter