யேசுவே திருச்சபை ஆலயத்தின்
Yesuvae Thiruchabai Aalayathin
யேசுவே திருச்சபை ஆலயத்தின்
என்றும் நிலைக்கும் மூலைக்கல்
பேசற் கரிய மூலைக்கல் அவர்
பெரும் மாளிகையைத் தாங்கும் கல்
ஆகாதிதென்று வீடு கட்டுவோர்
அவமதித்திட்ட இந்தக் கல்
வாகாய் ஆலய மூலைக் கமைந்து
வடிவாய்த் தலைக்கல்லான கல்
ஆலயமெல்லாம் இசைவாய் இணைக்கும்
அதிசயமான அன்பின் கல்
ஞாலத்துப் பல ஜாதிகள் தமை
நட்புற ஒன்றய்ச் சேர்க்கும் கல்
ஒப்பில்லா அரும் மாட்சிமை யுறும்
உன்னத விலைபெற்ற கல்
எப்பொதும் பரஞ்சோதியாய் நீதி
இலங்கும் சூரியனான கல்
காற்றுக்கும் கன மழைக்கும் அசையா
கடிய மாபலமான கல்
மாற்றிக் கலியை ஆற்றித் துயரைத்
தேற்றிச் சபையைக் காக்குங் கல்
என்றும் கட்டுவோம் இந்த ஆலயத்தை
எழிலுறவே இக் கல்லின் மேல்
நன்றாய் இக்கல்லில் நம்பிக்கை வைப்போன்
நாணம் அடையான் மெய்தானே