• waytochurch.com logo
Song # 16014

இயேசுவின் ஒதுக்கில் நான்

Yesuvin Othukkil Naan


இயேசுவின் ஒதுக்கில் நான் இறக்க அருள்புரியும்

நேசபரனே இந்த நீசன் கெஞ்சிக் கேட்கிறேன்

நாள் ஓடும் சாவு சேரும் நாதா எந்த நேரமோ
பாழுடல் விட்டு ஜீவன் பறக்கும் வேளையறியேன்

இயேசுவை விட்டென் சாவு என்னைப் பிரித்திடாது
நீசன் அவரில் நின்றென் நேசரேயென்று சொல்வேன்

என் ஜீவன் இன்றுபோயும் என் மீட்பரால் நான் பாக்யன்
என் சாவு நாளை வந்தும் யேசுவுக்குள் நான் நிற்பேன்

நீர் என்னை இங்கே வைக்கும் நேரமட்டும் உமக்கே
சீராக நான் பிழைக்கத் தேவா எனை நடத்தும்

சீர்ப்படத் தாமதமேன் ஜீவவழி பிடிப்பேன்
ஈறந்தத்தை நினைப்பேன் என் தீபமே சோடிப்பேன்

யேசுவின் நீதியால் நான் என்பாவத்தை மூடுவேன்
மாசற்றுச் சுத்தமாவேன் மனதில் விசுவாசித்து

ஆண்டவரைங் காயங்கள் அடியேனின் அடைக்கலம்
மாண்டோர் அவர் நான் மாளேன் மரணம் எனது பாக்கியம்


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com