என் இயேசு உன்னைத் தேடுகிறார்
Yen Yesu Unnai Theadugiraar
என் இயேசு உன்னைத் தேடுகிறார்
இடமுண்டோ மகனே உன் உள்ளத்தில்
கதறிடும் உன்னைப் பார்க்கின்றார் உன்
கண்ணீரைத் துடைக்க வருகின்றார்
உதவிடும் கரத்தை நீட்டுகிறார் உன்
உள்ளத்தில் வாழத் துடிக்கின்றார்
சிலுவை மரணம் உனக்காக
சிந்திய திரு இரத்தம் உனக்காக
உன் பாவம் சுமந்து தீர்த்தாரே தன்
உயிர் தந்து உன்னை மீட்டாரே
மார்த்தாள் வீட்டில் இடம் கொடுத்தாள்
மரித்த லாசரை மீண்டும் கண்டாள்
கலங்கிடும் மனிதா வருவாயா என்
கர்த்தரின் பாதம் விழுவாயா
சகேயு உடனே இறங்கி வந்தான்
சந்தோஷமாக வரவேற்றான்
பாவங்கள் அனைத்தும் அறிக்கை செய்தான்
பரலோக இன்பம் பெற்றுக் கொண்டான்
பேதுரு படகில் இடம் கொடுத்தான்
பெரும் தோல்வி மாறி மகிழ்வடைந்தான்
அதிசய தேவனைக் கண்டு கொண்டான் என்
ஆண்டவன் பின்னே நடந்து சென்றான்

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter