• waytochurch.com logo
Song # 16023

காதல் காதல் காதல் என்று

Song Kadhal Kadhal Endru


காதல் காதல் காதல் என்று
காதல் செய்த மனிதரெல்லாம்
காதலோடு கடைசிவரை வாழ்ந்ததில்லை உனக்காக வாழ்வேன் என்று
உறுதிசெய்த உறவுகளெல்லாம்
ஒருநாளில் உன்னைவிட்டு போனதோ உயிரோடு உயிராய் கலந்து
உன்னோடு வெல்வேன் என்ற
ஸ்நேகங்கள் உன்னை விட்டுப்போனதோ

உண்மை காதலன் என் இயேசுதான்
அவர் உயிரை தந்ததால்
நான் உயிர் வாழ்கிறேன் (2)

தாய் தந்தை அன்பை மறந்து
காதல் செய்த காதலெல்லாம்
சோகமென்னும் கண்ணீரில் மூழ்கியதோ
நிலவு போல இராமுழுதும்
கண்விழித்து நின்றாலும்
நீதேடும் அன்பு உனக்கு கிடைக்கலையோ
உனக்காக வாழ்வேன் என்று
உறுதிசெய்த உறவுகளெல்லாம்
ஒருநாளில் உன்னைவிட்டு போனதோ உயிரோடு உயிராய் கலந்து
உன்னோடு வெல்வேன் என்ற
ஸ்நேகங்கள் உன்னை விட்டுப்போனதோ

உண்மை காதலன் என் இயேசுதான்
அவர் உயிரை தந்ததால்
நான் உயிர் வாழ்கிறேன் (2)

சிலுவை சென்ற இயேசுவிடம்
உன்வாழ்வை ஒப்புவித்தல்
தோல்வி இனி உன்வாழ்வில் வருவதில்லை
மனிதனாய் உலகில்வந்து
உனக்காக சிலுவை சுமந்து
புதியதோர் வாழ்வை உனக்கு தந்தாரே
நீதேடும் நிம்மதியேல்லாம்
என் இயேசு தந்திடுவார
அளவில்லா பாசம் உன் மேல் வைத்தாரே
உள்ளத்தின் ஏக்கங்கள் எல்லாம்
ஊன் இயேசு அறிவாரே
தற்கொலையின் எண்ணங்கள் வேண்டாமே

உண்மை காதலன் என் இயேசுதான்
அவர் உயிரை தந்ததால்
நான் உயிர் வாழ்கிறேன் (2)


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com