கர்த்தர் தரும் புது நாமத்தால்
Karttar tarum putu namattal Nesa Akkini
கர்த்தர் தரும் புது நாமத்தால்
அழைக்கப்படுவாய்
கர்த்தர் தரும் அபி@ஷகம்
மேன்மைப்படுத்தும்
கீர்த்தியாக, புகழ்ச்சியாக, மேன்மையாக
உன்னை உயர்த்திடுவார்
2.
உயிரோடிருக்கும் நாளெல்லாம்
ஒருவனும் உன்னை எதிர்த்து
நிற்பதில்லை, நிற்பதேயில்லை
ஒரு வழியாய் வருபவர்கள்
பல வழியாய் மறைவார்கள்
3.
மோசேயோடு இருந்ததுபோல்
உன்னோடென்றும் இருந்திடுவார்
ஒருபோதும் விலகிடமாட்டார்
திடன் கொள்வாய் பெலன் கொள்வாய்
வல்லமையாக எழும்பிடுவாய்
4.
தந்தையைப்போல்,
தாயைப்போல் ஆற்றித் தேற்றி,
சுமந்திடுவார்; உன்னை ஏந்திடுவார்
கிருபையினால் கரம்பிடித்தே,
காலமெல்லாம் நடத்திடுவார் -2