என் நெருக்கத்திலே என் துணையானீரே
Song En Nerukkathilae En Thunai
என் நெருக்கத்திலே என் துணையானீரே(2)
என் ஓடுக்கத்தையே நீர் மாற்றினீரே
என் தகப்பனே, என் இயேசுவே(2)
வேறு துணையேயில்லை
நீர் விலகவில்லை
உம் கரமோ கைவிடவேயில்லை
புயலில் சிக்குண்ட சிறு ஓடம் நானே
வறண்ட வயல்வெளி நான் தானே- (2)
என் தேகம் எல்லாம் பெலவீனம் தானே
என் தேகம் எல்லாம் பெலவீனம் தானே
தூக்கி நிறுத்தினீரே, பெலப்படுத்தினீரே (2) - வேறு
உருக்குலைந்த பாத்திரம் நானே,
மதில் இடிந்த பட்டணம் நானே- (2)
என் இதயம் முழுதும் பல காயம் தானே
என் இதயம் முழுதும் பல காயம் தானே
ஆற்றி தேற்றினீர, உருமாற்றினீரே (2) - வேறு
கடல் அளவு சொந்தங்கள் தானே
அதில் வானளவு பிரிவுகள் தானே- (2)
நான் நம்பினோரும் என்னை நம்பலையே
நான் நம்பினோரும் என்னை நம்பலையே
என்னை அரவணைத்த என் தகப்பன் நீரே (2) - வேறு