• waytochurch.com logo
Song # 16131

இவரே நம் தேவனாகிய கர்த்தராகிய மீட்பராகிய இயேசு கிறிஸ்து

Ivarae Nam Devan


இவரே நம் தேவனாகிய கர்த்தராகிய மீட்பராகிய இயேசு கிறிஸ்து
இவரே நம் மகிமை நிறைந்த, மாட்சிமை பொருந்திய
வல்லமையுள்ள இயேசு கிறிஸ்து


நம் பாவங்கள் நம்மை நம்மை விட்டு போக்குவார்
நம் துயரங்கள் நம்மை நம்மை விட்டு துரத்துவார்
நம் கஷ்டங்கள் நம்மை நம்மை விட்டு விலக்குவார்
நம் கண்ணீரை நம்மை நம்மை விட்டு துடைத்திடுவார்
இவர் எங்கள் (5) தேவனாகிய இயேசு கிறிஸ்து(2)


1. செங்கடல் போன்ற பாதையிலே நடந்து போனாலும்
தண்ணீர்கள் புரளுவதில்லை நம்மீது புரளுவதில்லை
அக்கினி ஜுவாலை பிரச்சனைகள் சந்திக்க நேர்ந்தாலும்
ஜுவாலை பரவுவதில்லை நம்மீது பரவுவதில்லை


நம் கர்த்தர் நம்மைக் காப்பவரே அவர் கரங்களில் ஏந்திக் காப்பாரே
நமக்காய் மரணத்தை ஜெயித்தாரே தம் ஜீவன் தந்து காப்பாரே
மரணத்தை ஜெயித்தாரே தம் ஜீவன் தந்து காப்பாரே
இவரே நம் தேவன் இவரே நம் ஜீவன்
இவர் அன்பு பெரியது அது அளவிட முடியாதது


இவர் இரக்கம் பெரியது அதின் ஐஸ்வரியம் உயர்ந்தது
இவரே நம் தேவன் இவரே நம் ஜீவன்
சிலுவையில் மரித்தவர் மரித்து உயிர்த்தவர் இன்றும் ஜீவிப்பவர்
இவர் எங்கள் (5) தேவனாகிய இயேசு கிறிஸ்து(2)


2. உலகத்தின் முடிவுபரியந்தம் உங்களோடு இருக்கிறேன்
என்று சொன்னா ரே கிறிஸ்தேசு சொன்னாரே
உங்கள் இருதயம் கலக்கமடைய வேண்டாம் சஞ்சலப்படவும் வேண்டாம்
கர்த்தர் ஜெயித்தாரே உலகத்தை ஜெயித்தாரே


நம் கர்த்தர் நம்மோடு இருப்பாரே நம் நம்பிக்கையாக இருப்பாரே
நம்மை இரட்சிக்க உலகத்தில் பிறந்தாரே கடைசி மட்டும் கூட இருப்பார்
இவரே நம் தேவன் இவரே நம் ஜீவன்
இவர் அன்பு பெரியது அது அளவிட முடியாதது


இவர் இரக்கம் பெரியது அதின் ஐஸ்வரியம் உயர்ந்தது
இவரே நம் தேவன் இவரே நம் ஜீவன்
சிலுவையில் மரித்தவர் மரித்து உயிர்த்தவர் இன்றும் ஜீவிப்பவர்
இவர் எங்கள் (5) தேவனாகிய இயேசு கிறிஸ்து(2)


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com