இராஜா உம் மாளிகையில்
Raja Um Maaligaiyil
இராஜா உம் மாளிகையில்
இராப்பகலாய் அமர்ந்திருப்பேன் - இயேசு
துதித்து மகிழ்ந்திருப்பேன்
துயரம் மறந்திருப்பேன் - உம்மை
ஆராதனை ஆராதனை
அப்பா அப்பா உங்களுக்குத்தான்
1. என் பெலனே என் கோட்டையே
ஆராதனை உமக்கே
மறைவிடமே என் உறைவிடமே
ஆராதனை உமக்கே
2. எங்கும் நிறைந்த யெகோவா
ஏலோஹிம் ஆராதனை உமக்கே
எங்கள் நீதியே யெகோவா
ஸிட்கேனு ஆராதனை உமக்கே
3. பரிசுத்தமாக்கும் யெகோவா
மெக்காதீஸ் ஆராதனை உமக்கே
உருவாக்கும் தெய்வம் யெகோவா
ஓசேனு ஆராதனை உமக்கே
4. உன்னதரே உயர்ந்தவரே
ஆராதனை உமக்கே
பரிகாரியே பலியானீரே
ஆராதனை உமக்கே
5. சீர்படுத்தும் சிருஷ்டிகரே
ஆராதனை உமக்கே
ஸ்திரப்படுத்தும் துணையாளரே
ஆராதனை உமக்கே
6. தாழ்மையிலே நினைத்தவரே
ஆராதனை உமக்கே
ஏழ்மையை மாற்றினீரே
ஆராதனை உமக்கே

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter