Aalayam Vaanga Vaanga ஆலயம் வாங்க வாங்க
பல்லவி
வாங்க வாங்க என்னோடுகூட
ஆலயம் செல்வோமா
தேவன் செய்த நன்மைகள் நினைத்து
பாடல் பாடுவோமா - (2)
1. நம் கைகளைத் தட்டி கெம்பீரத்தோடும்
உற்சாகத்தோடும் ஆராதிப்போம்
தேவன் நீர் செய்த நன்மைகள் நினைத்து
வெட்கப்படாமல் நன்றி சொல்வோம்
உமக்கு நன்றியப்பா
உமக்கு நன்றியப்பா - இயேசப்பா (4) - வாங்க
2. ஆபத்து காலத்தில் கூப்பிடு என்றீர்
தூதர்கள் அனுப்பினீர் நன்றி ஐயா
போகும் இடமெல்லாம் வந்தீரே
கண்மணி போல் என்னைக் காத்தீரே - (2)
உமக்கு நன்றியப்பா
உமக்கு நன்றியப்பா - இயேசப்பா (4) - வாங்க
3. கலங்கின நேரத்தில் கலங்காதே என்றீர்
பாதைகள் திறந்தீரே நன்றி ஐயா
என் தேவைகள் சந்திக்க வல்லவரே
எல்ஷடாய் நீரே யெகோவாயீரே - (2)
உமக்கு நன்றியப்பா
உமக்கு நன்றியப்பா - இயேசப்பா (4) - வாங்க
4. தனிமையின் வேளையில் துணையாக வந்தீரே
சபைக்குள் சேர்த்தீரே நன்றி ஐயா
என் குடும்பத்தில் சமாதானம் தருபவரே
அஸ்திபாரம் நீரே நன்றி சொல்லுவேன்
உமக்கு நன்றியப்பா
உமக்கு நன்றியப்பா - இயேசப்பா (4) - வாங்க