Kanmaniyae Nee
கண்மணியே நீ கண்ணுறங்காயோ
கடமைகள் அழைக்கின்றதோ -- உந்தன்
எளிமையும் உலகினை அசைக்கின்றதோ - 2
1) ஊர்ந்து செல்லும் வேளையிலும் நீ
கண்ணயர்ந்து தூங்கையிலும்
உந்தன் அன்பின் ஆழம் வந்தேகுதைய்யா
இறைவா எனக்காய் ஏழை உருவாய்
எந்தன் பாவம் நீக்கப் பிறந்தாய் - கண்மணியே
2) மூடுபனியின் இராவினிலே நீ
வாடைக் காற்றின் வாடையிலே - உந்தன்
சாந்த முகம் என்னுள் ஒளிருதய்யா
தேவா உமக்கே துதியே என்றும்
போற்றும் பாடல் கேட்டு உறங்காய் - கண்மணியே