Neer En Sontham நீரே எனக்கு சொந்தம்
நீரே எனக்கு சொந்தம்
நீரே என் தெய்வம் - 2
உம்மைப் பாடுகிறேன்
உளமாற துதிக்கிறேன் - 2
இராஜா நீர் வாழ்க
தெய்வமே நீர் வாழ்க - 2
1) உம் கரத்தில் நான் கருவி ஆனேன்
எடுத்து என்னை பயன்படுத்தும் - 2
உம் விருப்பம் போல் உம் ஊழியத்திலே
பயன்படுத்தும், என்னை பயன்படுத்தும் - 2 - இராஜா
2) உம் கரத்தில் நான் களிமண் ஆனேன்
உம் சித்தம் போல் வனைந்திடுமே - 2
உமக்காக உழைக்கும் பாத்திரமானேன்
பயன்படுத்தும், என்னை பயன்படுத்தும் - 2 - இராஜா
3) உமக்காக உழைக்கும் அடிமையானேன்
வல்லமையால் என்னை நிரப்பிடுமே - 2
யோனாவைப் போல பவுலைப் போல
பயன்படுத்தும், என்னை பயன்படுத்தும் - 2 - இராஜா