Neserea Authma Neserea நேசரே.. ஆத்தும நேசரே..
என்னுடையவரே நான் உமக்கே சொந்தமே (2)
உம்முடையவன் நான், நீர் எனக்கே சொந்தமே (2)
பல்லவி
நேசரே.. ஆத்தும நேசரே..
அன்பின் நேசரே இதய நேசரே (2)
உமக்கே ஆராதனை என் அன்பே ஆராதனை (2)
சரணங்கள்
1. பாட இயலாதே, நாவு போதாதே
நாத உம் தயவு (2)
நேசம் பொங்குதே உள்ளம் எங்குதே
தேவா உம் கிருபை (2)
2. கனவிலும் நினையா இனிமை அல்லவோ,
இயேசுவே உம் நினைவு (2)
வாரும் நேசரே, வரங்கள் தாருமே,
மகிழ்ந்து பாடிடவே (2)
3. அன்பை ருசித்தேனே, மன்னா புசித்தேனே
தேனிலும் இனிவரே (2)
பெலனைத் தாருமே, அபிஷேகம் ஊற்றுமே
உமக்காய் உழைத்திடவே (2)