எங்கே எங்கே எங்கே தேடுவேனோ?
Engae Engae Engae Theduvaen
எங்கே, எங்கே, எங்கே தேடுவேனோ?
என் ஆத்துமா நேசரை (2)
என் அன்பு பொங்குதே,
என் உள்ளம் ஏங்குதே (2)
பல்லவி
ஆ ஆ ஆ ஆ ஆத்தும நேசரே
ஓ ஓ ஓ ஓ உன்னத தேவனே
சரணங்கள்
1.அழகில் சிறந்தவர் அன்புக்கேற்றவர்
ஆத்துமாவுக்கு இனிய நண்பராம்
அருகில் இருந்தென்னை ஆற்றும் அன்பரே
அருமை இரட்சகர் என் இயேசுவல்லோ? (2)
2.கண்டதில்லையே இந்த தியாகத்தை
பார்த்ததில்லையே இனிய பாசத்தை
செல்லுமிடமெல்லாம் கூட வருபவர்
சொந்த இரட்சகர் என் இயேசுவல்லோ?
3.நீங்கிடாதவர் ஒரு நிமிடமும்
விலகிடாதவர் என்றும் என்னோடு
உலக முடிவிலே கூட இருப்பவர்
சதாகாலமும் அவர் என்னுடையவர்

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter