• waytochurch.com logo
Song # 16195

Raajavaagiya


ராஜாவாகிய என் தேவனே
உம்மை நான் உயர்த்துகிறேன்
உன் திருநாமம் எப்பொழுதும்
என்றென்றைக்கும் ஸ்தோத்தரிப்பேன்
நாள்தோறும் நான் போற்றுவேன்
என்றென்றும் ஸ்தோத்தரிப்பேன்

1. மிகவும் பெரியவர் துதிக்குப் பாத்திரர்
துதிகளின் மத்தியில் வாசம் செய்பவர்
துதி உமக்கே கணம் உமக்கே
மகிமை உமக்கே என்றென்றைக்கும்

உமக்கே (3) ஸ்தோத்திரம்
உயிருள்ள நாளெல்லாம்

2. எல்லார் மேலும் தயவுள்ளவர்
எல்லாருக்கும் நன்மை செய்பவர்
உம் கிரியைகள் எல்லாம் உம்மைத் துதிக்கும்
பரிசுத்தவான்கள் ஸ்தோத்தரிப்பார்கள்

3. நோக்கி பார்க்கின்ற அனைவருக்கும்
ஏற்ற வேளையில் உணவளிக்கின்றீர் - நீர்
கையை விரித்து சகல உயிர்களின்
விருப்பங்களை நிறைவேற்றுகிறீர் - நீர்

4. வழிகளிலெல்லாம் நீதியுள்ளவர்
கிரியைகளின் மேல் கிருபையுள்ளவர்
நம்பி கூப்பிடும் அனைவருக்கும்
அருகில் இருக்கின்றீர் அரவணைக்கின்றீர்

5. அன்புகூறுகின்ற அனைவரின் மேல்
கண்காணிப்பாய் இருக்கின்றீர்
பயந்து நடக்கின்ற உன் பிள்ளைகளின்
வஞ்சைகளை நிறைவேற்றுகின்றீர்

6. தடுக்கி விழுகிற யாவரையும்
தாங்கி தாங்கி நடத்துகின்றீர்
தாழ்த்தப்பட்ட அனைவரையும்
தூக்கி உயரத்தில் நிறுத்துகிறீர்


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com