Siluvayin Kayangal
சிலுவையின் காயங்கள்
நீர் செய்த தியாகங்கள்
சிதைந்தும் திருமேனி
தீர்ந்ததென் பாரங்கள் (2)
சிரசிலே முள்முடி தேகத்தில் கசயடி
ஜெயித்தீரே சாத்தானை சிலுவையிலே (2)
இவ்வளவாய் உன் மேல் அன்பு கூர்ந்தேன் என்று
இரு கரம் விரித்தவரே ஆணிகள் ஏற்றவரே (2) - சிலுவையின்
1.உழப்பட்ட நிலம் போல் ஆனது உம் தேகம்
ஊற்றென பாய்ந்தே ஓடுது உம் உதிரம் (2)
ஏதெனில் துவங்கி தொடர்ந்திட்ட என் பாவம்
முடித்தீரே கல்வாரி சிலுவையிலே (2)
இவ்வளவாய் உன் மேல் அன்பு கூர்ந்தேன் என்று
இரு கரம் விரித்தவரே ஆணிகள் ஏற்றவரே (2) - சிலுவையின்
2.பாவியை மீட்க பரலோகம் துறந்தீர்
பரமனின் திரு சித்தம் செய்திட துணிந்தீர் (2)
முண்ணனை துவங்கி தொடர்ந்திட உம் பாசம்
மூடித்தீரே சாபத்தை சிலுவையிலே (2)
இவ்வளவாய் உன் மேல் அன்பு கூர்ந்தேன் என்று
இரு கரம் விரித்தவரே ஆணிகள் ஏற்றவரே (2) - சிலுவையின்