எதை நினைத்தும் நீ - s
Yedhai Ninaithum Nee
எதை நினைத்தும் நீ
கலங்காதே மகனே
யேகோவா தேவன் உன்னை
நடத்திச் செல்வார் - 2
1. இதுவரை உதவின எபிநேசர் உண்டு
இனியும் உதவி செய்வார் - 2
2. சுகம் தரும் தெய்வம்
யேகோவா ரஃப்பா உண்டு
பூரண சுகம் தருவார்
3. புதுபெலன் அடைந்து சிறகுகளை விரித்து
உயர பறந்திடுவாய் மடிந்து போவதில்லை
4. பூரண அன்பு பயத்தை புறம்பே தள்ளம்
அன்பிலே பயமில்லை
5. கர்த்தரை நினைத்து மகிழ்ந்து களிகூர்ந்தால்
உனது விருப்பம் செய்வார்
6.வழிகளிலெல்லாம் அவரையே நம்பியிரு
உன் சார்பில் செயலாற்றுவார்
7. வலுவூட்டும் இயேசுகிறிஸ்துவின் துணையால்
எதையும் செய்திடுவாய்

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter