• waytochurch.com logo
Song # 16217

எனது மணவாளனே என்

Yenadhu Manavaalanae Yen


எனது மணவாளனே என் இதய ஏக்கமே
இனியவரே இயேசையா
உம்மைத் தான் தேடுகிறேன் நான்
உம்மைத் தான் நேசிக்கிறேன்

உம் நாமம் சொல்லச் சொல்ல என்
உள்ளமெல்லாம் துள்ளுதையா
உம் அன்பைப் பாடப் பாட
இதயமெல்லாம் இனிக்குதையா என்

உம் முகம் பார்க்கணுமே
உம் அழகை ரசிக்கணுமே
உம் பாதம் அமரணுமே
உம் சித்தம் அறியணுமே நான்

என் வாயின் சொற்களெல்லாம்
ஏற்றனவாய் இருப்பதாக
என் இதய எண்ணமெல்லாம்
உகந்தனவாய் இருப்பதாக உமக்கு

அழகெல்லாம் அற்றுப் போகும் உலக
எழிலெல்லாம் ஏமாற்றும்
உம் அன்பு மாறாதையா
ஒரு நாளும் அழியாதையா

நான் பார்க்கும் பார்வையெல்லாம்
ஏற்றனவாய் இருப்பதாக
நான் நடக்கும் பாதையெல்லாம்
உகந்தனவாய் இருப்பதாக


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No
  • Song youtube video link :
    Copy sharelink from youtube and paste it here

© 2025 Waytochurch.com