Aalayam Poi Thozhava ஆலயம் போய்த் தொழவா ருமென்ற தொனி
ஆலயம் போய்த் தொழவா ருமென்ற தொனி
ஆனந்தப்பரவசம் அருளுதாத்துமந்தனில்
ஆலயந் தொழுவது சாலவும் நன்றென
ஆன்றோருரை நெறி சான்ற வர்க்கானதே
ஆவலாயதி காலையும் பகல் மாலையுந் திருநாளிலும்பரன்
பரம சன்னதியென்றும் பரிசுத்த தூதர்கள்
பணிந்து புகழ்ந்து கீதம் பாடியஞ்சலி செய்யும்
முறையோதுந் திருமறை கரமேந்தி தக்ஷணை
முழுமனதோடு கொண்டு உளம் இதழ் துதிவிண்டு
மோட்ச மாநகர் காட்சியால் இக சாட்சியாம் பரன்
மாட்சி காணவே
பூர்வமுதல் தொழும்பாபோந்தாலயந் தொழுதார்
புனித சுதனும் நமக்கினு முன்மாதிரி தந்தார்
ஆர்வமுளாரவரே ஆராருடனுஞ் சென்றார்
ஐயனின் மகிமையே அங்கும் விளங்க நின்றார்
ஆதலாலினி யாரிலுங்குறை யோதிடாதென துள்ளமே இனி
தனித்தியா னத்துடன் சமுசார ஜெபம் நன்று
சபையாரோ டர்ச்சனை தருதல் மிகவும் நன்று
இனிதே சத்தியவேதம் பொருளறவே உணர்ந்து
இலகு சுடர்கள்போல உலகுக்கொளியே தந்து
எந்தையார்சுதன் சிந்தையில்வளர்ந் தென்றுமன்பதில்
ஒன்றவே திரு
aalayam poyth tholavaa rumenta thoni
aananthapparavasam aruluthaaththumanthanil
aalayan tholuvathu saalavum nantena
aantorurai neri saanta varkkaanathae
aavalaayathi kaalaiyum pakal maalaiyun thirunaalilumparan
parama sannathiyentum parisuththa thootharkal
panninthu pukalnthu geetham paatiyanjali seyyum
muraiyothun thirumarai karamaenthi thakshannai
mulumanathodu konndu ulam ithal thuthivinndu
motcha maanakar kaatchiyaal ika saatchiyaam paran
maatchi kaanavae
poorvamuthal tholumpaaponthaalayan tholuthaar
punitha suthanum namakkinu munmaathiri thanthaar
aarvamulaaravarae aaraarudanunj sentar
aiyanin makimaiyae angum vilanga nintar
aathalaalini yaarilungurai yothidaathena thullamae ini
thaniththiyaa naththudan samusaara jepam nantu
sapaiyaaro darchchanai tharuthal mikavum nantu
inithae saththiyavaetham porularavae unarnthu
ilaku sudarkalpola ulakukkoliyae thanthu
enthaiyaarsuthan sinthaiyilvalarn thentumanpathil
ontavae thiru