அந்த நாள் பாக்கிய நாள்
அந்த நாள் பாக்கிய நாள்
பல்லவி
அந்த நாள் பாக்கிய நாள் - நான் மீட்கப்பட்ட
அந்த நாள் பாக்கிய நாள்
அனுபல்லவி
அந்தநாள் ஆனந்தநாள், அருமை இரட்சகரென்னை
அன்போடழைத்தெனது அசுத்தங்கள் நீக்கின நாள் --- அந்த
சரணங்கள்
1. அன்றே எனக்குப் பேதித்தார் - அவர் வழியில்
அநுதினம் செல்லக் கற்பித்தார்;
என்றும் அவர்மேல் சார்ந்தே இன்ப ஜீவியம் செய்ய
ஏவினார் என் இரட்சகர், எங்கும் எடுத்துரைப்பேனே --- அந்த
2. என்றனை அன்றே இழுத்தார்- தமதன்பினால்
இசைவாய்த் தம்முடன் இணைத்தார்;
சொந்தம் நான் அவருக்குச் சொந்தம் அவர் எனக்கு,
இந்த உறுதிபண்ணி இனிய ஐக்கியம் பெற்றேன் --- அந்த
3. ஆறுதல்களால் நிறைந்தேன் - அளவில்லாத
ஆசிகளினால் மகிழ்ந்தேன்;
தாறுமாறான உள்ளம் மாறுதலை யடைந்து
மாறாத யேசுவினில் மகிமையாய்த் தங்கப் பெற்றேன் --- அந்த
4. அந்நாளில் வாக்குப் பண்ணினேன் - உறுதியாக
எந்நாளும் நான் புதுப்பிப்பேன்;
சொன்ன இவ்வாக்கை நிதம் , சுத்தமாய் நிறைவேற்ற
உன்னத பலம் தாராய் , என்னையாட்கொண்ட தேவா --- அந்த