உருகாயோ நெஞ்சமே
உருகாயோ நெஞ்சமே
1. உருகாயோ நெஞ்சமே
குருசினில் அந்தோ பார்!
கரங் கால்கள் ஆணி யேறித்
திருமேனி நையுதே!
2. மன்னுயிர்க்காய்த் தன்னுயிரை
மாய்க்க வந்த மன்னவர்தாம் ,
இந்நிலமெல் லாம் புரக்க
ஈன குரு சேறினார்.
3. தாக மிஞ்சி நாவறண்டு
தங்க மேனி மங்குதே ,
ஏகபரன் கண்ணயர்ந்து 
எத்தனையாய் ஏங்குறார்.
4. மூவுலகைத் தாங்கும் தேவன்
மூன்றாணி தாங்கிடவோ?
சாவு வேளை வந்த போது
சிலுவையில் தொங்கினார்.
5. வல்ல பேயை வெல்ல வானம்
விட்டு வந்த தெய்வம் பாராய்
புல்லர் இதோ நன்றி கெட்டுப் 
புறம் பாக்கி னார் அன்றோ?

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter