• waytochurch.com logo
Song # 16473

Alaiyinil Amaithi Vendum அலையினில் அமைதி வேண்டும் –


அலையினில் அமைதி வேண்டும் –
இந்த அவனியில் நிம்மதி வேண்டும்
வாழ்வில் சாந்தி வேண்டும் – அதை
இறைமகன் இயேசுவே தரக் கூடும் – 2
1. பருவத்தின் சிகரம் வாலிபம் – அது
இன்பத்தை நாடும் காலம்!
இளமையின் இராகமே மோகம்-அது
சிந்தையை மயக்கும் ரோகம்!
பாவம் விருந்தல்ல சாபம் – அந்த
பாவத்தின் முடிவே நரகம்….
நரகம் ! நரகம்! நரகம்! நரகம்!
2. உலகம் கவர்ந்து ஈர்க்கும் – உன்னை
உல்லாசப் பறவையாய் மாற்றும்
அற்பகால மாய சுகங்கள் – உன்
எதிரியின் கண்ணி வெடிகள்
பாவத்தின் விலங்கு இறுகும் – தீய
பழக்கமே உயிரைக் குடிக்கும்…
குடிக்கும் ! அழிக்கும்! ஒழிக்கும்!
சிதைக்கும்!
3. உலகின் அதிபதி சாத்தான் – அவன்
பொய்யை தானே விதைப்பான்
மனிதரைக் கொல்லும்
மாபாதகன்-அவன் இரக்கமில்லாத
வஞ்சகன் மானம் இழக்கச்
செய்து – மன நிம்மதி
கெடுப்பான்…. அரக்கன்!
கெடுப்பான்! சிதைப்பான்!
ஒழிப்பான்! அழிப்பான்!

alaiyinil amaithi vaenndum –
intha avaniyil nimmathi vaenndum
vaalvil saanthi vaenndum – athai
iraimakan yesuvae tharak koodum – 2
1. paruvaththin sikaram vaalipam – athu
inpaththai naadum kaalam!
ilamaiyin iraakamae mokam-athu
sinthaiyai mayakkum rokam!
paavam virunthalla saapam – antha
paavaththin mutivae narakam….
narakam ! narakam! narakam! narakam!
2. ulakam kavarnthu eerkkum – unnai
ullaasap paravaiyaay maattum
arpakaala maaya sukangal – un
ethiriyin kannnni vetikal
paavaththin vilangu irukum – theeya
palakkamae uyiraik kutikkum…
kutikkum ! alikkum! olikkum!
sithaikkum!
3. ulakin athipathi saaththaan – avan
poyyai thaanae vithaippaan
manitharaik kollum
maapaathakan-avan irakkamillaatha
vanjakan maanam ilakkach
seythu – mana nimmathi
keduppaan…. arakkan!
keduppaan! sithaippaan!
olippaan! alippaan!


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com