Anathi Devan En Adaikalame அநாதி தேவன் என் அடைக்கலமே
அநாதி தேவன் என் அடைக்கலமே
அவர் நித்திய புயங்கள் என் ஆதாரமே – 2
இந்த தேவன் என்றென்றுமுள்ள
சதா காலமும் நமது தேவன்
மரண பரியந்தம் நம்மை நடத்திடுவார்
1. காருண்யத்தாலே இழுத்துக்கொண்டார்
தூய தேவ அன்பே
இவ்வனாந்திரத்தில் நயங்காட்டி என்னை
இனிதாய் வருந்தி அழைத்தார்
2. கானகப் பாதை காரிருளில்
தூய தேவ ஒளியே
அழுகை நிறைந்த பள்ளத்தாக்குகளை
அரும் நீரூற்றாய் மாற்றினாரே
3. கிருபை கூர்ந்து மனதுருகும்
தூய தேவ அன்பே
என் சமாதானத்தின் உடன்படிக்கைதனை
உண்மையாய் கர்த்தர் காத்துக்கொள்வார்
4. வறண்ட வாழ்க்கை செழித்திடுதே
தூய தேவ அருளால்
நித்திய மகிழ்ச்சி தலை மேலிருக்கும்
சஞ்சலம் தவிப்பும் ஓடிப்போம்
5. ஆனந்தம் பாடியே திரும்பியே வா
தூய தேவ பலத்தால்
சீயோன் பர்வதம் என்னை சேர்த்திடுவார்
சந்ததம் மகிழ்ச்சி அடைவேன்
anaathi thaevan en ataikkalamae
avar niththiya puyangal en aathaaramae - 2
intha thaevan ententumulla
sathaa kaalamum namathu thaevan
marana pariyantham nammai nadaththiduvaar
1. kaarunnyaththaalae iluththukkonndaar
thooya thaeva anpae
ivvanaanthiraththil nayangaatti ennai
inithaay varunthi alaiththaar
2. kaanakap paathai kaarirulil
thooya thaeva oliyae
alukai niraintha pallaththaakkukalai
arum neeroottaாy maattinaarae
3. kirupai koornthu manathurukum
thooya thaeva anpae
en samaathaanaththin udanpatikkaithanai
unnmaiyaay karththar kaaththukkolvaar
4. varannda vaalkkai seliththiduthae
thooya thaeva arulaal
niththiya makilchchi thalai maelirukkum
sanjalam thavippum otippom
5. aanantham paatiyae thirumpiyae vaa
thooya thaeva palaththaal
seeyon parvatham ennai serththiduvaar
santhatham makilchchi ataivaen