Appa Thayala Gunanandha அப்பா தயாள குணாநந்த மோனந்த வேதா பொல்லா
அப்பா தயாள குணாநந்த மோனந்த வேதா பொல்லா
இப்பாரில் காய்பாமுன் ஏகினீரோ ஏசுநாதா
குற்றம் சுமத்தப் பொய்ச் சாட்சிகளைத் தேடினாரோ
செற்றலர் எல்லாம் திரண்டேகமாய்க் கூடினாரோ
கன்னம் அதைத்ததோ கண்கள் சிவந்தவோ சுவாமீ -பொறி
மின்னிக் கலங்கி, விசனம் உற்றீரோ நன் னேமி
மெய்யான சாட்சி இட்டையனே சொன்ன உம் மீதே – தீயர்
பொய்யான சாட்சி இட்டையோ, சுமத்தினார் தீதே
என் கட்டைநீக்கிஈடேற்ற வாதைக்குள்ளானீரோ – உம்மைப்
பின் கட்டாய்க் கட்டி பிலாத்திடங்கொண்டு போனாரோ
இத்தனை பாடுகள் நீர் பட்ட தென்கொடும் பாவமே – என்றன்
கர்த்தனே உன் மீதில் வந்ததையோ தேவ கோபமே
நீர்பட்ட பாட்டைப்போல் ஆர் பட்டுத்தாங்குவார் தேவே – பல
கார்பட்ட நெஞ்சமும் சீர்பட்டுப் போகுமே கோவே
appaa thayaala kunnaanantha monantha vaethaa pollaa
ippaaril kaaypaamun aekineero aesunaathaa
kuttam sumaththap poych saatchikalaith thaetinaaro
settalar ellaam thiranntaekamaayk kootinaaro
kannam athaiththatho kannkal sivanthavo suvaamee -pori
minnik kalangi, visanam uttaீro nan naemi
meyyaana saatchi ittaைyanae sonna um meethae – theeyar
poyyaana saatchi ittaைyo, sumaththinaar theethae
en kattaைneekkieetaetta vaathaikkullaaneero – ummaip
pin kattayk katti pilaaththidangaொnndu ponaaro
iththanai paadukal neer patta thenkodum paavamae – entan
karththanae un meethil vanthathaiyo thaeva kopamae
neerpatta paattaைppol aar pattuththaanguvaar thaevae – pala
kaarpatta nenjamum seerpattup pokumae kovae