Arpana Malarai Vanthaen அர்ப்பண மலராய் வந்தேன்
அர்ப்பண மலராய் வந்தேன்
அர்ச்சனை ஆக்கினேன் என்னை – 2
மணமில்லாத மலரானாலும் இதழ்வாடியே போனாலும் – 2
வேள்வியில் சேர்த்துக்கொள்வாய் – அந்த
ஜோதியில் நிறைவு கொள்வேன் – 2
கோதுமை மணியாய் மடிந்து – என்னை
வெண்ணிற அப்பமாய் தந்தேன் – 2
என்னுடல் உன்னுடலாகிடவே உன்னுடலாய் நான் மாறிடவே
மகிழ்வுடன் தந்தேனே என்னை கனிவுடன் ஏற்பாயே
விதியென்னும் சகதியில் சாய்ந்தேன் – புவி
அதிபதி உன் திட்டம் மறந்தேன் – 2
மதியில்லாதவன் ஆனாலும் கதியிழந்தே நான் போனாலும்
சுதியுடன் சேர்த்துக்கொள்வாய் நான் ஜதியுடன் பாட்டிசைப்பேன்
arppana malaraay vanthaen
archchanai aakkinaen ennai – 2
manamillaatha malaraanaalum ithalvaatiyae ponaalum – 2
vaelviyil serththukkolvaay – antha
jothiyil niraivu kolvaen – 2
kothumai manniyaay matinthu – ennai
vennnnira appamaay thanthaen – 2
ennudal unnudalaakidavae unnudalaay naan maaridavae
makilvudan thanthaenae ennai kanivudan aerpaayae
vithiyennum sakathiyil saaynthaen – puvi
athipathi un thittam maranthaen – 2
mathiyillaathavan aanaalum kathiyilanthae naan ponaalum
suthiyudan serththukkolvaay naan jathiyudan paattisaippaen