துங்கனில் ஒதுங்குவோன்
துங்கனில் ஒதுங்குவோன், பங்கமின்றித் தங்குவான்
பல்லவி
துங்கனில் ஒதுங்குவோன், பங்கமின்றித் தங்குவான்
அனுபல்லவி
கங்குல் பக லும்பரனார் காவல் அர ணாதலால் --- துங்கனில்
சரணங்கள்
1. வேடன் கண்ணி குத்துங்கால், விக்கினங்கள் சுற்றுங்கால்,
மூடிஉனைக் காப்பரே, ஓர் மோசமின்றிச் சேர்ப்பரே --- துங்கனில்
2. பக்கத்திலே ஆயிரம், பாலே பதினாயிரம்
சிக்கென வீழ்ந்தாழுமே, தீங்குனை அண்டாதுகாண் --- துங்கனில்
3. கண்ணினாலே பார்க்குவாய், கடவுள் செயல் நோக்குவாய்
அண்ணலே உன் அடைக்கலம், ஆண்டவன் உன் தாபரம் --- துங்கனில்
4. தீங்குனை அண்டாலும், தீனங்கள் தீண்டாமலும்,
பாங்கு தூதர் காபந்தில் பத்திரமாய் வாழ்வையே --- துங்கனில்
5. பாதம் கல்லிட றாமல், பகைவர் உக்ரம் மீறாமல்
தூதர் உனைக் கைகளில் தூக்கி ஏந்திக் கொள்வரே --- துங்கனில்
6. நீடுநாட்களாகவே கேடு துன்பம் போகவே,
வீடுபரதீசினில் சூடுவான் மா மகிமைகள் --- துங்கனில்