Engae Sumanthu Pokireer எங்கே சுமந்து போகிறீர் சிலுவையை நீர்
எங்கே சுமந்து போகிறீர்? சிலுவையை நீர்
எங்கே சுமந்து போகிறீர்?
1. எங்கே சுமந்து போறீர்? இந்தக் கானலில் உமது
அங்கம் முழுதும் நோக, ஐயா, என் ஏசு நாதா – எங்கே
2. தோளில் பாரம் அழுத்த, தூக்கப் பெலம் இல்லாமல்,
தாளுந் தத்தளிக்கவே, தாப சோபம் உற, நீர் – எங்கே
3. வாதையினால் உடலும் வாடித் தவிப்புண்டாக,
பேதம் இல்லாச் சீமோனும் பின்னாகத் தாங்கிவர – எங்கே
4. தாயார் அழுதுவர சார்ந்தவர் பின் தொடர,
மாயம் இல்லாத ஞான மாதர் புலம்பி வர – எங்கே
5. வல்ல பேயைக் கொல்லவும், மரணந்தணை வெல்லவும்,
எல்லை இல்லாப் பாவங்கள் எல்லாம் நாசமாகவும் – எங்கே
6. மாசணுகாத சத்திய வாசகனே, உமது
தாசர்களைக் காக்கவும் தாங்காச் சுமையை எடுத்து – எங்கே
engae sumanthu pokireer? siluvaiyai neer
engae sumanthu pokireer?
1. engae sumanthu poreer? inthak kaanalil umathu
angam muluthum nnoka, aiyaa, en aesu naathaa - engae
2. tholil paaram aluththa, thookkap pelam illaamal,
thaalun thaththalikkavae, thaapa sopam ura, neer - engae
3. vaathaiyinaal udalum vaatith thavippunndaaka,
paetham illaach seemonum pinnaakath thaangivara - engae
4. thaayaar aluthuvara saarnthavar pin thodara,
maayam illaatha njaana maathar pulampi vara - engae
5. valla paeyaik kollavum, marananthannai vellavum,
ellai illaap paavangal ellaam naasamaakavum – engae
6. maasanukaatha saththiya vaasakanae, umathu
thaasarkalaik kaakkavum thaangaach sumaiyai eduththu – engae