Enna Thiyaakam En Kalvaari Naayakaa இதுவல்லவா தியாகம்
இதுவல்லவா தியாகம்
என்ன தியாகம், என், கல்வாரி நாயகா!
என்னையும் உம்மைப்போல் மாற்றிடவோ!
1. விண் தூதர் போற்றிடும் உம் – பிதாவையும்
விட்டிறங்கி வந்தீரே!
மாட்டுக் கொட்டிலோ வாஞ்சித்தீரையா!
மானிடர் மேல் அன்பினால்
2. ஜெனித்த நாள் முதலாய் – கல்வாரியில்
ஜீவனை ஈயும் வரை
பாடுகள் உம் பங்காய்க் கண்டீரையா!
பாவியை மீட்பதற்காய்
3. தலையைச் சாய்த்திடவோ – உமக்கு ஓர்
தலமோ எங்குமில்லை
உம் அடிச்சுவட்டில் நான் செல்லவோ!
முன் பாதை காட்டினீரே
4. தாய் தந்தை வீடும் நாடும் – இன்னும்
தனக்குள்ளதெல்லாம் வெறுத்து
அனுதினம் குருசை சுமப்பவரல்லோ!
அப்போஸ்தலர் என்றீரே
5. பாடுகளல்லோ உம்மை – மகிமையில்
பூரணமாய்ச் சேர்த்ததே
உம்மோடு நானும் பாடு சகிப்பேன்!
என் ஜீவனையும் வைத்தே
6. இன்பம் எனக்கினியேன் – என் அருமை
இயேசுதான் என் பங்கல்லோ!
நேசரின் பின்னே போகத்துணிந்தேன்
பாசம் என்னில் வைத்ததால்
ithuvallavaa thiyaakam
enna thiyaakam, en, kalvaari naayakaa!
ennaiyum ummaippol maattidavo!
1. vinn thoothar pottidum um – pithaavaiyum
vittirangi vantheerae!
maattuk kottilo vaanjiththeeraiyaa!
maanidar mael anpinaal
2. jeniththa naal muthalaay – kalvaariyil
jeevanai eeyum varai
paadukal um pangaayk kannteeraiyaa!
paaviyai meetpatharkaay
3. thalaiyaich saayththidavo – umakku or
thalamo engumillai
um atichchuvattil naan sellavo!
mun paathai kaattineerae
4. thaay thanthai veedum naadum – innum
thanakkullathellaam veruththu
anuthinam kurusai sumappavarallo!
apposthalar enteerae
5. paadukalallo ummai – makimaiyil
pooranamaaych serththathae
ummodu naanum paadu sakippaen!
en jeevanaiyum vaiththae
6. inpam enakkiniyaen – en arumai
yesuthaan en pangallo!
naesarin pinnae pokaththunninthaen
paasam ennil vaiththathaal