Eththanai Thiral En Paavam எளியன் மேல் இரங்கிடும்
எளியன் மேல் இரங்கிடும்
எத்தனை திரள் என் பாவம் என் தேவனே!
எளியன்மேல் இரங்கையனே
நித்தம் என் இருதயம் தீயதென் பரனே
நிலைவரம் எனில் இல்லை நீ என் தாபரமே
1. பத்தம் உன்மேல் எனக்கில்லை என்பேனோ?
பணிந்திடல் ஒழிவேனோ?
சுத்தமுறுங் கரம்கால்கள் விலாவினில்
தோன்றுது காயங்கள் தூய சிநேகா!
2. என்றன் அநீதிகள் என் கண்கள் முன்னமே
இடைவிடாதிருக்கையிலே
உன்றன் மிகுங் கிருபை ஓ! மிகவும் பெரிதே
உத்தம மனமுடையோய் எனை ஆளும்!
3. ஆயங் கொள்வோன்போல் பாவ ஸ்திரீபோல்
அருகிலிருந்த கள்ளன்போல்
நேயமாய் உன் சரண் சரண் என வணங்கினேன்
நீ எனக்காகவே மரித்தனை பரனே!
4. கெட்ட மகன்போல் துட்டனாய் அலைந்தேன்
கெடு பஞ்சத்தால் நலிந்தேன்
இட்டமாய் மகன் எனப் பாத்திரன் அலனான்
எனை ரட்சித்திடல் உன்றன் நிமித்தமே அப்பனே!
eliyan mael irangidum
eththanai thiral en paavam en thaevanae!
eliyanmael irangaiyanae
niththam en iruthayam theeyathen paranae
nilaivaram enil illai nee en thaaparamae
1. paththam unmael enakkillai enpaeno?
panninthidal olivaeno?
suththamurung karamkaalkal vilaavinil
thontuthu kaayangal thooya sinaekaa!
2. entan aneethikal en kannkal munnamae
itaividaathirukkaiyilae
untan mikung kirupai o! mikavum perithae
uththama manamutaiyoy enai aalum!
3. aayang kolvonpol paava sthireepol
arukiliruntha kallanpol
naeyamaay un sarann sarann ena vananginaen
nee enakkaakavae mariththanai paranae!
4. ketta makanpol thuttanaay alainthaen
kedu panjaththaal nalinthaen
ittamaay makan enap paaththiran alanaan
enai ratchiththidal untan nimiththamae appanae!