Geetham Geetham Jaya Jaya Geetham கீதம் கீதம் ஜெய ஜெய கீதம் – கைகொட்டிப் பாடிடுவோம்
கீதம் கீதம் ஜெய ஜெய கீதம் – கைகொட்டிப் பாடிடுவோம்
இயேசு ராஜன் உயிர்த் தெழுந்தார் அல்லேலூயா
ஜெயம் என்று ஆர்ப்பரிப்போம் – ஆ ஆ கீதம்
1. பார் அதோ கல்லறை மீடின பெருங்கல்
புரண்டுருண்டோடுதுபார் – அங்கு
போட்ட முத்திரை காவல் நிற்குமோ – தேவ
புத்திரர் சந்நிதி முன் – ஆ ஆ கீதம்
2. வேண்டாம் வேண்டாம் அழுதிட வேண்டாம்
ஓடி உரைத்திடுங்கள் – தாம்
கூறின மாமறை விட்டனர் கல்லறை
போங்கள் கலிலேயாவுக்கு – ஆ ஆ கீதம்
3. அன்னா காய்பா ஆரியர் சங்கம்
அதிரடி கொள்ளுகின்றார் – இன்னா
பூத கணங்கள் இடி ஒலி கண்டு
பயந்து நடுங்குகின்றார்
4. வாசல் நிலைகளை உயர்த்தி நடப்போம்
வருகிறார் ஜெயவீரன் – நம்
மேள வாத்தியம் கை மணி பூரிகை
எடுத்து முழங்கிடுவோம்
geetham geetham jeya jeya geetham - kaikottip paadiduvom
yesu raajan uyirth thelunthaar allaelooyaa
jeyam entu aarpparippom - aa aa geetham
1. paar atho kallarai meetina perungal
puranndurunntooduthupaar - angu
potta muththirai kaaval nirkumo - thaeva
puththirar sannithi mun - aa aa geetham
2. vaenndaam vaenndaam aluthida vaenndaam
oti uraiththidungal - thaam
koorina maamarai vittanar kallarai
pongal kalilaeyaavukku - aa aa geetham
3. annaa kaaypaa aariyar sangam
athirati kollukintar - innaa
pootha kanangal iti oli kanndu
payanthu nadungukintar
4. vaasal nilaikalai uyarththi nadappom
varukiraar jeyaveeran - nam
maela vaaththiyam kai manni poorikai
eduththu mulangiduvom