Iraiva Unthan Paatham Varugindren இறைவா உந்தன் பாதம் வருகின்றேன்
இறைவா உந்தன் பாதம் வருகின்றேன்
என்னையே உனக்காகத் தருகின்றேன் (2)
மலர்களில் விழுந்து மணமென நுழைந்து
காற்றினில் கலந்து கனிவோடு பணிந்து
இறைவா உந்தன் பாதம் வருகின்றேன்
என்னையே உனக்காகத் தருகின்றேன்
1. பசி உள்ளோர்க்கு உணவாக நானிருப்பேன்
உடை இல்லாத எளியோர்க்கு உடையளிப்பேன் (2)
விழுந்தவரைத் தூக்கிடுவேன் இங்கு
நலிந்தவரின் துணையிருப்பேன்
இதுவே நான் தரும் காணிக்கையே
இறைவா உந்தன் பாதம் வருகின்றேன்
என்னையே உனக்காகத் தருகின்றேன்
2. இருப்பவர் கொடுப்பதில் இன்பமென்ன கையில்
இருப்பதைக் கொடுப்பதே இன்பமென்றாய் (2)
பலியை அல்ல இரக்கத்தையே என்னில்
விரும்புகின்ற இறைமகனே
உன்னைப்போல் நானும் உருவாகிட – இறைவா
iraivaa unthan paatham varukinten
ennaiyae unakkaakath tharukinten (2)
malarkalil vilunthu manamena nulainthu
kaattinil kalanthu kanivodu panninthu
iraivaa unthan paatham varukinten
ennaiyae unakkaakath tharukinten
1. pasi ullorkku unavaaka naaniruppaen
utai illaatha eliyorkku utaiyalippaen (2)
vilunthavaraith thookkiduvaen ingu
nalinthavarin thunnaiyiruppaen
ithuvae naan tharum kaannikkaiyae
iraivaa unthan paatham varukinten
ennaiyae unakkaakath tharukinten
2. iruppavar koduppathil inpamenna kaiyil
iruppathaik koduppathae inpamentay (2)
paliyai alla irakkaththaiyae ennil
virumpukinta iraimakanae
unnaippol naanum uruvaakida - iraivaa