Kallum Allave Kayam கல்லும் அல்லவே காயம் – வல்லும் அல்லவே – இது
கல்லும் அல்லவே காயம் – வல்லும் அல்லவே – இது
வெள்ளி பொன் விலைமதியா மேரும் அல்லவே
வல்லமை பேசாதே நாளை வருவதறியாய் – அதால்
நல்ல வழி தேடி தேவ நாமத்தைத் தியானி
சூரியன் கீழ்க் கண்டதெல்லாம் மாயை அல்லவோ – சாலமோன்
பார் அறியச் சொன்னதை நீ பார்த்தறியாயோ
காற்றடித்த மேகம் புகைக்கொப்பதாகவே – இங்கே
போற்றிய மனுடர் ஜீவன் போய் ஒழியுமே
வேகமாய் வடியும் ஆற்றுக் கொப்பதாகவே – மாய
தேக நரர் நாட்களும் சீக்கிரம் கழியுமே
இராப்பகல் இருள் வெளிச்சம் மாறும் வண்ணமே – ஐயோ
நராட்களின் மகிழ்ச்சிக்கு மா மாறுதல் உண்டே
பூவதும் உதிரும் பசும்புல்லும் வதங்கும் – அது
போலவே நரர் உருவம் மாறிவதங்கும்
மேலது கீழ் கீழதுமேல் ஆம் உருளைபோல் – நரர்
மேன்மையும் வாழ்வும் கீழது மேலும் ஆகுமே
நுண்ணிமை ஞானி என்றாலும் கீர்த்திபெற்றாலும் – ஐயோ
அன்னவன் மலையும் நேரம் யாவும் கலையும்
ஆசனம் துரைத்தனம் தத்துவங்கள் ஒழியும் – அர
சாண்ட மன்னாரும் ஒரு நாள் மாண்டொழிவாரே
யாவும் ஓட்டமாகப் பாயும் யாவும் அழியும் – மெய்த்
தேவபக்தி யே கெலிக்கும் ஜீவன் நிலைக்கும்
kallum allavae kaayam – vallum allavae – ithu
velli pon vilaimathiyaa maerum allavae
vallamai paesaathae naalai varuvathariyaay – athaal
nalla vali thaeti thaeva naamaththaith thiyaani
sooriyan geelk kanndathellaam maayai allavo – saalamon
paar ariyach sonnathai nee paarththariyaayo
kaattatiththa maekam pukaikkoppathaakavae – ingae
pottiya manudar jeevan poy oliyumae
vaekamaay vatiyum aattuk koppathaakavae – maaya
thaeka narar naatkalum seekkiram kaliyumae
iraappakal irul velichcham maarum vannnamae – aiyo
naraatkalin makilchchikku maa maaruthal unntae
poovathum uthirum pasumpullum vathangum – athu
polavae narar uruvam maarivathangum
maelathu geel geelathumael aam urulaipol – narar
maenmaiyum vaalvum geelathu maelum aakumae
nunnnnimai njaani entalum geerththipettaாlum – aiyo
annavan malaiyum naeram yaavum kalaiyum
aasanam thuraiththanam thaththuvangal oliyum – ara
saannda mannaarum oru naal maanntolivaarae
yaavum ottamaakap paayum yaavum aliyum – meyth
thaevapakthi yae kelikkum jeevan nilaikkum