Karththarin Panthiyil Vaa கர்த்தரின் பந்தியில் வா – சகோதரா
கர்த்தரின் பந்தியில் வா – சகோதரா
கர்த்தரின் பந்தியில் வா
கர்த்தர் அன்பாய்ச் சொந்த ரத்தத்தைச் சிந்தின
காரணத்தை மனப் பூரணமாய் எண்ணி — கர்த்தரின்
1. ஜீவ அப்பம் அல்லோ? – கிறிஸ்துவின்
திருச் சரீரம் அல்லோ?
பாவ மனங் கல்லோ? – உனக்காய்ப்
பகிரப்பட்ட தல்லோ?
தேவ குமாரனாம் ஜீவ அப்பத்தை நீ
தின்று அவருடன் என்றும் பிழைத்திட — கர்த்தரின்
2. தேவ அன்பைப் பாரு – கிறிஸ்துவின்
சீஷர் குறை தீரு
பாவக் கேட்டைக் கூறு – ராப்போசன
பந்திதனில் சேரு
சாவுக்குரிய மா பாவமுள்ள லோகம்
தன்னில் மனம் வைத்து அன்னியன் ஆகாதே — கர்த்தரின்
3. அன்பின் விருந்தாமே – கர்த்தருடன்
ஐக்யப் பந்தியாமே
துன்பம் துயர் போமே – இருதயம்
சுத்த திடனாமே
இன்பம் மிகும் தேவ அன்பின் விருந்துக்கு
ஏது தாமதமும் இல்லாதிப்போதே வா — கர்த்தரின்
karththarin panthiyil vaa – sakotharaa
karththarin panthiyil vaa
karththar anpaaych sontha raththaththaich sinthina
kaaranaththai manap pooranamaay ennnni — karththarin
1. jeeva appam allo? – kiristhuvin
thiruch sareeram allo?
paava manang kallo? – unakkaayp
pakirappatta thallo?
thaeva kumaaranaam jeeva appaththai nee
thintu avarudan entum pilaiththida — karththarin
2. thaeva anpaip paaru – kiristhuvin
seeshar kurai theeru
paavak kaettaைk kootru – raapposana
panthithanil seru
saavukkuriya maa paavamulla lokam
thannil manam vaiththu anniyan aakaathae — karththarin
3. anpin virunthaamae – karththarudan
aikyap panthiyaamae
thunpam thuyar pomae – iruthayam
suththa thidanaamae
inpam mikum thaeva anpin virunthukku
aethu thaamathamum illaathippothae vaa — karththarin