Kolkathaa Malai Meethilae கொல்கதா மலை மீதிலே
கொல்கதா மலை மீதிலே
சிலுவை சுமந்தேகினார்
உன்னத பிதாவின் சித்தமாய்
உத்தமர் இரத்தம் சிந்தினார்
1. அந்தோ எருசலேமே
ஆண்டவர் பவனி வந்தார்
அந்த நாளை நீ மறந்தாய்
அன்பரோ கண்ணீர் சிந்தினார் — கொல்கதா
2. மேனியில் கசையடிகள்
எத்தனை வசை மொழிகள்
அத்தனையும் அவர் உனக்காய்
அன்புடன் சுமந்து சகித்தார் — கொல்கதா
3, உத்தம தேவ மைந்தனே
சுத்தமாய் இரத்தம் சிந்தியே
நித்திய வாழ்வு தனையே
நீசனாம் எனக்களித்தார் — கொல்கதா
4. வஞ்சக உலகினிலே
வணங்கா கழுத்துடனே
வழிபோகும் மானிடனே
வந்திடாயோ இயேசுவண்டை — கொல்கதா
kolkathaa malai meethilae
siluvai sumanthaekinaar
unnatha pithaavin siththamaay
uththamar iraththam sinthinaar
1. antho erusalaemae
aanndavar pavani vanthaar
antha naalai nee maranthaay
anparo kannnneer sinthinaar — kolkathaa
2. maeniyil kasaiyatikal
eththanai vasai molikal
aththanaiyum avar unakkaay
anpudan sumanthu sakiththaar — kolkathaa
3, uththama thaeva mainthanae
suththamaay iraththam sinthiyae
niththiya vaalvu thanaiyae
neesanaam enakkaliththaar — kolkathaa
4. vanjaka ulakinilae
vanangaa kaluththudanae
valipokum maanidanae
vanthidaayo yesuvanntai — kolkathaa